
posted 3rd April 2022
இலங்கை அரசு பிரகடனப்படுத்திய திடீர் ஊரடங்கு
நாடு முழுவதும் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம், திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (02) மாலையில் அரசின் இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியது.
நாடளாவிய ரீதியில் கோட்டாபய அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்ததை அடுத்து இந்தத் திடீர் அறிவிப்பு வெளியாகியது.
நேற்று சனிக்கிழமை (02) மாலை 6 மணிக்கு நடைமுறைக்கு வந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நாடு முழுவதும் வார இறுதி ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஆளும் கட்சி உறுப்பினர்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்திலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மக்களின் பாதுகாப்புக்காக முழு நாட்டிலும் வார இறுதி ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், அந்தக் கோரிக்கைக்கு ஜனாதிபதி பதிலளிக்கவில்லை. இந்தநிலையிலேயே அரசாங்க தகவல் திணைக்களம் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
ஊரடங்கு அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் ஒருவித பதற்ற நிலை ஏற்பட்டது. மக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருள்களை வாங்குவதிலும், வீடுகளுக்குச் செல்வதிலும், மும்முரமாக இருந்தமையால் பெரும் நெரிசல் நிலை ஏற்பட்டது.
ஊரடங்கு அறிவிப்பு மிகக்குறுகிய காலத்தில் வெளியிடப்பட்டமையால் மக்கள் செய்வதறியாது பெரும் இக்கட்டு நிலைக்கு உள்ளாகியதை அவதானிக்க முடிந்தது.
அவசரகாலச் சட்டத்தை மீளப்பெறு
இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெறவேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அரசுக்கெதிரான எதிர்ப்பையும், போராட்டங்களையும், இதன் மூலம் அடக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை முழுவதும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House